பழனி முருகன் கோயிலில் நடிகை சமந்தா, 600 படிப்பாதை வழியாக சூடம் ஏற்றிய படியே சென்று சாமி தரிசனம் செய்தார்.
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரையின் படி தீவிர சிகிச்சை மேற்கொண்டு, உடல் நலம் முன்னேறி வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியானது.
இதையும் படிக்கவும்: புல்வாமா தாக்குதல் நினைவு தினம்; வீரர்களின் தியாகத்தை மறக்கமாட்டோம்- பிரதமர் மோடி
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நடிகை சமந்த வருகை தந்தார். மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக சென்ற சமந்தா, 600 படிப்பாதைகளிலும் சூடம் ஏற்றி கொண்டு மேலே சென்று ஆனந்த விநாயகரை வணங்கினார். தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருக பெருமானை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சமந்தா, சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கபட்டதாகவும், தற்போது கடவுளின் அருளோடும்,மருத்துவர்களின் ஆலோசனைகளோடு மீண்டு வந்ததாகவும் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக பழனி கோயிலுக்கு வந்த சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கபட்டன. அவருடன் 96
திரைப்பட இயக்குநர் சி.பிரேம்குமார் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர்.







