டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற 59-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி 103 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் டேவிட் வார்னர் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.







