முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

தனி விமானத்தில் ஐதராபாத்.. ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா !

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா, தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ’அண்ணாத்த’. இந்தப் படத்தில் நயன்தாரா, குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து டிசம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் ரஜினியின் உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் அவர் சென்னை திரும்பினார். அதன்பிறகு இதன் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கியது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, நடிகை நயன்தாராவும் தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார்.

அவர் ஐதராபாத் விமான நிலையத்தில் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement:

Related posts

தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 29 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

Jeba

ட்விட்டருக்கு அபராதம் விதித்த ரஷ்யா!

Dhamotharan

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு!

Gayathri Venkatesan