தனிமையில இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை அமலா பால் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட அவரது முன்னாள் காதலர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ் சினிமாவின் உட்ச நத்திரமாக வளம்வருபவர் அமலா பால். மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர், சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கால் எடுத்துவைத்தார். அதன் பிறகு மைனா, தலைவா போன்ற வெற்றிப்படங்களையும் கொடுத்தார். தெய்வத் திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்ததின் மூலம் இயக்குநர் ஏ.எல், விஜயுடன் காதல் மலர்ந்தது. கடந்த 2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க கூடாது என இயக்குனர் விஜய் தெரிவித்ததாக தெரிகிறது. இதில் அமலா பாலுக்கு உடன்பாடு இல்லாததன் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் ஆடை என்ற திரைப்படம் பெரும் சர்ச்சயையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. கடந்த 2020ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த பிரபல பாடகரும், திரைப்பட பைனான்சியருமான பனீந்தர் சிங் தத் என்பவருடன் அமலாபாலுக்கு காதல் மலர்ந்தது. இருவருமே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்த பின்னர், காதல் ஜோடிகளின் நிச்சயதார்த்தம் ராஜஸ்தானில் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. இடைப்பட்ட கால காட்டத்தில் இருவருமே ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்பொழுது கருத்து வேறுபாடு ஏற்பட்டு அமலா பால், பனீந்தர் சிங்கை பிரிந்தார்.
தற்போது, பனீந்தர் சிங் விழுப்புரம் மாவட்டம் பெரியமுதலியார் சாவடி ஆரோவில் சாலை மீனாம்பிகை கார்டனில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அமலா பால் சென்னையில் வசித்து வருகிறார். தனித்தனியாக வசித்து வந்த நிலையில், தனிமையில் இருந்த போட்டோக்களை வெளியிட போவதாக, பனீந்தர் சிங் தத், அமலா பாலை அவ்வப்போது மிரட்டி வந்ததாக தெரிகிறது.
இந்த பிரச்சனை சமீபத்தில் பூதாகரமாக மாறியிருக்கிறது. இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்றும், வெளியிடாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும் எனவும் மிரட்டியிருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த அமலா பால், விழுப்புரம் மாவட்ட குற்ற பிரிவில் பனீந்தர் சிங் மீது புகார் கொடுத்தார். போலீசார் பனீந்தர் சிங் மீது பெண் பெயருக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிப்பது, திருட்டு, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் பண்ணை வீட்டில் தங்கியிருந்த பனீந்தர் சிங்கை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.