நடிகை ஐஸ்வர்யா ராயின் மற்றொரு டாபெல்கேங்கர் புகைப்படம் வைரல்!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் முக ஜாடையில் இருக்கும் மற்றொரு பெண்ணின் புகைப்படம் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் ஒரு நபர் மாதிரியாக ஏழு நபர்கள் இருப்பார்கள் என பொதுக் கருத்து ஒன்று…

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் முக ஜாடையில் இருக்கும் மற்றொரு பெண்ணின் புகைப்படம் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகில் ஒரு நபர் மாதிரியாக ஏழு நபர்கள் இருப்பார்கள் என பொதுக் கருத்து ஒன்று உண்டு. அப்படி முக ஜாடையில் ஒன்றாக இருக்கும் நபரை நாம் ஆங்கிலத்தில் டாபெல்கேங்கர் (DoppelGanger) என்று அழைக்கிறோம்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மற்றொரு டாபெல்கேங்கரை இணைய வாசிகள் கண்டுப்பிடித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ப்லாகரான ஆம்னா இம்ரான் என்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய்
போல் அச்சு அசல் முக ஜாடையில் உள்ளார்.

தற்போது ஆம்னா, நடிகை ஜஸ்வர்யா ராய் புகைப்படத்தை ஒன்றாக இணைத்து சமூகவலை தளங்களில் நெட்டிசன்ஸ்கள் carbon copy எனக் கூறி ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். இதேபோல் இதற்கு முன்பு 2019, 2020 ஆம் ஆண்டுகளில் ஐஸ்வர்யா ராய் போல் இருக்கம் பெண்களின் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.