மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது கனவு – நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி

மணிரத்தினம் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்பது கனவு என்று, பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கூறினார். மணிரத்தினத்தின் கனவுப் படமான…

மணிரத்தினம் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்பது கனவு என்று, பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கூறினார்.

மணிரத்தினத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, நாசர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

இது குறித்து நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் பொன்னியின் செல்வன் புத்தகம் குறித்து கேள்விப்பட்டதில்லை. 2019 ஆம் ஆண்டு மணிரத்தினம் சார் என்னை அழைத்தார் இந்த படம் பற்றி கூறினார். அதற்கு பின் தான் அந்த புத்தகத்தை நான் படிக்க ஆரம்பித்தேன். பூங்குழலி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. மணிரத்தினம் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்பது கனவு.  முதல்முறை இத்தனை கேமராக்கள் என் முன் நின்று நான் பார்க்கிறேன். பூங்குழலி கதாப்பாத்திரம் எனக்கு சொன்ன பின்னர் நான் நிறைய உழைத்தேன். நான் என்ன செய்ய நினைத்தேனோ அதை எல்லாம் நன்றாக செய்தேன். அவருடைய ஸ்டைலில் என்னிடம் இந்த கதாப்பாத்திரத்தை சொன்னார். இது அருமையான அனுபவம். நான் உடல் ரீதியாக நிறைய உழைப்பை செலுத்தினேன் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.