பொன்னியின் செல்வன் பாகம் – 1 திரைப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
Thank You, Suriya Sir! @Suriya_offl#PS1🗡️ @madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman @Tipsofficial @TipsRegional #TipsTamil pic.twitter.com/dJOVUURPeC
— Lyca Productions (@LycaProductions) July 7, 2022
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டீசரை நடிகர் சூர்யா நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக லைகா புரொடெக்ஷன்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.