நடிகர் சிம்பு நடித்து வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய பாடல் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி,ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானே இசையமைக்கிறார்.
உலகமெங்கும் செப்டம்பர் 15 திரையரங்குகளில் வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வெளியான ‘ காலத்துக்கும் நீ வேணும்’ என்ற பாடலும் ,ஏ.ஆர். ரகுமான் பாடிய ’மறக்குமா நெஞ்சம்’ பாடலும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் புதிதாக வெளியான மல்லிப்பூ பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் தாமரை வரிகளில் மதுஸ்ரீ பாடிய இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.







