மூத்த தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்!

முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கவுள்ளார். இதனையடுத்து பல்வேறு மூத்த தலைவர்களை சந்தித்து அவர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார். இதன்…

முதலமைச்சராக நாளை பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களை சந்தித்து வருகிறார்.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கவுள்ளார். இதனையடுத்து பல்வேறு மூத்த தலைவர்களை சந்தித்து அவர்களிடம் வாழ்த்து பெற்று வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை பல்லாவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

முன்னதாக சென்னை நந்தனத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நல்லக்கண்ணுவை மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம். வீரப்பனையும் சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெறவுள்ளார்.

இதனிடையே பதவியேற்கும் முன் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவது சிறந்த அணுகுமுறை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், மு.க.ஸ்டாலினின் இந்த அணுகுமுறை மகிழ்ச்சிக்குரியது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.