26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகர்களுக்கு கிடைக்கும் மரியாதை இயக்குநர்களுக்கு கிடைப்பதில்லை – இயக்குநர் பேரரசு

இயக்குநர்களுக்கு இப்போது பெரிய மரியாதை இல்லை. ஆனால் நடிகர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பாஜ்வா நடிக்க, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் நட்டி நடராஜ், ராம்கி, பூனம் பாஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், ஸ்ரீராம் கார்த்திக், பிரஜின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே.பி.தனசேகரன் பேசும்போது, “இயக்குநராக இது எனக்கு முதல் படம். புது இயக்குநர் தானே என நினைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படத்தை பெரிய படமாகக் கொண்டு வருவதற்கு எனக்கு ஊக்கமளித்தார். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் தேவராஜ், புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது, மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள சத்யதேவ் நிச்சயம் நல்ல இடத்திற்கு வருவார்” என்று கூறினார்.

நடிகை பூனம் பாஜ்வா பேசுகையில், “இந்த படத்தின் தமிழரசி என்கிற அருமையான கதாபாத்திரத்தை இயக்குநர் எனக்குக் கொடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் நட்டியுடன் இணைந்து நடித்தது போன்று எதிர்காலத்தில் தான் நடிக்கும் படங்களில் அவரைப்போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்த அளவுக்கு பழகுவதற்கும், இணைந்து நடிப்பதற்கும் நல்ல மனிதர் அவர்” என்றார்.

நடிகர் ராம்கி பேசும்போது, “கோவிட் நிலவிய காலகட்டத்தில், ஊட்டியைச் சுற்றி இதுவரை படப்பிடிப்பு நடத்தாத பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது சாதாரண விஷயமல்ல. தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு தான் அதற்கு முக்கியமான காரணம். படக்குழுவினரின் பாதுகாப்புக்காக, தினசரி பூஜை நடத்தும் அளவிற்கு நல்ல மனிதர். 25 வருடத்திற்கு முன் நான் நடித்த படங்களில் நட்டி உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அதேபோன்று எளிமையான மனிதராக இருக்கிறார். ஒரே நாளில் நடக்கும் கதை என்றாலும் அடுத்து என்ன நடக்கும், பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை வைத்து விறுவிறுப்பாக இந்தப் படத்தை இயக்குநர் தனசேகரன் இயக்கி உள்ளார்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “ராம்கி ஹீரோவாக நடித்து வந்த சமயத்தில் கூட இப்படி ஒரு பாடல் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. இப்போது 3 கதாநாயகிகளுடன் அவர் ஆடுவதைப் பார்க்கும்போது ராம்கிக்கு யோகம் ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநர்களுக்கு இப்போது பெரிய மரியாதை இல்லை. ஆனால் நடிகர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது என்பதால் பலபேர் நடிப்பு பக்கம் கிளம்பி விட்டார்கள். காரணம் நடிகர்கள் கையில்தான் சினிமா இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து சிரமம் தரக்கூடிய, தயாரிப்பாளர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

“எப்போதும்போல உங்களுடைய ஆதரவு வேண்டும்”- நயன்தாரா

Arivazhagan Chinnasamy

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு யார் பயிற்சியாளர் தெரியுமா?

Web Editor

விடுதி உணவில் புழு ; மாணவிகள் சாலை மறியல்

Sugitha KS