நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, இதய பிரிவு மருத்துவர்கள் குழு, அவருக்கு இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதைக் கண்டறிந்தனர்.
அதையடுத்து இரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டெண்ட் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் நேற்று நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நடிகர் விவேக், (வயது 59) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.







