விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள படக்குழு கோப்ரா திரைப்படத்தின் டீசர் நாளை காலை 10.32 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.