நடிகர் விக்ரமுக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் சிகிச்சை

நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக உடலை வருத்தி எடையை குறைத்தும், ஏற்றியும்…

நடிகர் விக்ரம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக உடலை வருத்தி எடையை குறைத்தும், ஏற்றியும் அதற்கு புதிய வடிவத்தில் உயிர் கொடுப்பவர். சில மாதங்களுக்கு முன்பு வெளியான மகான் திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்துள்ள ஆதித்த கரிகாலன்  கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான டீசர் இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படுகிறது.இந்த நிலையில் நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டதாக அவரது மக்கள் தொடர்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். விக்ரம் விரைந்து உடல்நலம் பெற்று வர வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.