நடிகர் விஜயின் 49 – ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
நடிகர் விஜய்யின் 49 -வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ள சூழலில், முன்னதாக இன்று தென்காசி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி கோவிலில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.
இந்தத் தங்கத் தேரோட்ட நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்த நிலையில், அவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து தங்க தேரை இழுத்து சென்றனர்.
தொடர்ந்து திருமலை குமாரசாமிக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், பக்தர்களுக்கு அன்னதானமும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







