நடிகர் விஜயின் 49-வது பிறந்தநாள்; நடுக்கடலில் பதாகைகள் வைத்து ரசிகர்கள் கொண்டாட்டம்!

புதுச்சேரியில் நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் நடுக்கடலில் பதாகைகள் வைத்துள்ளனர். நடிகர் விஜய்யின் 49 -வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் விஜய் பிறந்த நாள் விழாவிற்கு…

புதுச்சேரியில் நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் நடுக்கடலில் பதாகைகள் வைத்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் 49 -வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் விஜய் பிறந்த நாள் விழாவிற்கு அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் பலருக்கு உதவுவது போன்றவற்றை செய்து வருவார்கள். அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் பதாகைகள் வைத்து வருகின்றனர்.

புதுச்சேரியில் நடிகர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாளின் போது அவர்களது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நடுக்கடலில் பதாகைகள் வைத்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி காந்தி சிலை பின்பு நடுக்கடலில் படகு மூலம் சென்று விஜய் ரசிகர்கள் பதாகைகள் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரி விஜய் ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.