மும்பை ரசிகர்களுடன் நடிகர் சூர்யா!

மும்பையில் ரசிகர்களுடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிததுள்ளனர். ஸ்டூடியோ…

மும்பையில் ரசிகர்களுடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிததுள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க, இப்படத்திற்கு தேவிஸ்ரீபிராசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஸ் உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 14ந் தேதி வெளியாக உள்ளது.

இப்படம் கடந்த அக்டாபர் 10ம் தேதி வெளியாக இருந்த நிலையில், ரஜினியின் வேட்டையன் படத்தால் தள்ளிப்போனது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மும்பையில் நடைபெற்ற புரமோஷன் விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.

அப்போது அங்கு திரண்ட ரசிகர்களுடன் நடிகர் சூர்யா செல்ஃபி எடுத்துக்கொண்டார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.