வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. சித்தாரா எண்டர்டெய்ன்மன்ட் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதிகா, ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் முதன் பாடலாக ‘பட்டாம்பூச்சி’ வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் 2 ஆவது பாடல் குறித்த அப்டேட்டை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவின் படி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2 – வது பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளார். டேன்ஸ் நம்பரான் இப்பாடலுக்கு கென் கருணாஸ் வரிகள் எழுத்தியுள்ளார்.




