முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார் – திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி

பிரபல நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயணமூர்த்தி. இவருக்கு வயது 66. சிவநாராயமூர்த்தியின் மனைவி பெயர் புஷ்பவள்ளி. இந்த தம்பதிக்கு 2 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிவநாராயணமூர்த்தி மறைந்த நடிகர் விசுவால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். பூந்தோட்டம் என்ற படம் மூலம் வெள்ளித் திரைக்கு வந்தவர். வடிவேலு, விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுக்கு துணை நடிகராக நடித்தவர். அதிகப்படியான படங்களில் போலீஸ் ஆக நடித்தவர். தன்னுடைய உடல் அமைப்பு மற்றும் முக பாவனைகளால் மக்களை சிரிக்க வைத்தவர்.

ஜூட் படத்தில் விவேக்கிற்கு அப்பாவாக நடித்து நம் அனைவரையும் கவர்ந்தவர், சிவ நாராயணமூர்த்தி. பம்பரக் கண்ணாலே, மணிகன்டன், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடிவேலுவுடன் சேர்ந்து இவர் நடித்த படங்கள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. எந்த படத்தில் நடித்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை
உருவாக்கியவர்.

இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு 8:30 மணியளவில் காலமானார். மேலும், இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெற உள்ளது. இவரது ரசிகர்களும் திரையுலகினரும், இவரது இறுதிசடங்கில் பங்கேற்கின்றனர். மேலும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Vandhana

தமிழ்நாடு பட்ஜெட்: துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

EZHILARASAN D

‘தளபதி’ ரஜினியாக மாறிய ஹரிஷ் கல்யாண்… ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Saravana