தமிழ்நாட்டில் சமீப காலமாக திரைத்துறை நட்சத்திரங்களின் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் தனுஷின் மேடைப் பேச்சுகளும், அவரது ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளும் தமிழ் சினிமாவில் புதிய விவாதத்தைக் கிளப்பியது. இதனிடையே நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’என்று முறைப்படுத்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜூலை மாதம் இந்த நற்பணி இயக்கத்திற்கான சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான அதிகாரப்பூர்வ கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாற்றங்கள் மற்றும் புதிய கொடியால் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்று தகவல் பரவியது.
இந்த நிலையில் இன்று கோவையில் தனுஷ் ரசிகர் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 3 ஆயிரம்பேர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் தனுஷ் ரசிகர் மன்றம், இனி தனுஷ் நற்பணி இயக்கம் என்ற பெயரில் இயங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. மேலும், புது கொடி, லோகோவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் விஜய் ரசிகர் மன்றமும் இப்படியாக பெயர் மாற்றப்பட்ட நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.




