நடிகர் சதீஷ் ஆக்ஷன் ஹீரோவாக கலக்கும் “சட்டம் என் கையில்” திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு கிரேசி மோகன் எழுத்தில் வெளியான “ஜெர்ரி” என்ற திரைப்படத்தில் நடித்தார் சதீஷ். பின்னர் சிவா நடிப்பில் வெளியான “தமிழ் படம்” நடிகர் சதீஷுக்கு மிகப்பெரிய பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்தது. அந்த படத்தில் சதீஷ் நகைச்சுவை வில்லனாக நடித்தார்.








