தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவர் நடிப்பில் வெளியான ஜெயம், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
நடிகர் ரவிமோகன், தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வழங்கக்கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பிற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி, விவாகரத்து கிடைக்கும்வரை படங்களில் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் தனது மனைவி ஆர்த்தி மற்றும் ஆர்த்தியின் தாயார் சுஜாதா உள்ளிட்டோர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த நிலையில் இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நடிகர் ரவி மோகன் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளார். ஜூலை மாத தொடக்கத்தில் அவர் சபரிமலைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







