நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்; ரசிகர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது ரசிகர் ஒருவர் ஒட்டிய போஸ்டர், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது தீவிர ரசிகர் ஒருவர் மதுரையில் ஒட்டியுள்ள…

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது ரசிகர் ஒருவர் ஒட்டிய போஸ்டர், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது தீவிர ரசிகர் ஒருவர் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் பேசுபொருளாகியுள்ளது. அதில், “ரஜினி தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை மாற்றிக்கொள்ள மாட்டேன் எனக்கூறி, பின்னர் மாற்றியதை சூசகமாக சாடியுள்ளார்.

அந்த ரசிகர், பாபாஜியிடம் அளித்த வாக்குறுதியின்படி, ரஜினி நலமுடன் இருப்பதற்காக பாபா குகைக்கு தொடர்ந்து 11-வது முறையாக செல்வதாக” போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும், ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று ஆயிரம் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கிவிட்டு, அன்று இரவே இமயமலையில் உள்ள பாபா குகைக்கு செல்ல உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகரம் முழுவதும் இடம் பெற்றுள்ள இந்த போஸ்டர், ரஜினியின் அரசியல் வரவை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததை பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளதாகவும், ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.