தமிழுக்குத் தொண்டு செய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் என மகாகவி பாரதியாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டானின் வெளியிட்டுள்ள ட்விட்டரில்,
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
திறம்பாட வந்த மறவன்!
அறம்பாட வந்த அறிஞன்!
படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழுக்குத் தொண்டு செய்த பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாரதியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாமிநாதன், சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், மொழிக்காவலர்களையும், தமிழறிஞர்களையும் அரசு பாதுகாத்து வருகிறது என குறிப்பிட்டார். மேலும், தலைவர்களின் சிலைகள் சேதமடையாமல் பாதுகாப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், தமிழ்ப்புத்தாண்டு விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவெடுப்பார் என அமைச்சர் சாமிநாதன் கூறினார்.