முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் தனது இல்லத்தில் இன்று காலை 8 மணிக்கு காலமானவர்.

பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு என 100 க்கும் மேற்பட்ட படங்களில்
நடித்துள்ளார். வெற்றி விழா, லக்கி மேன், மகுடம் என பல படங்களை இயக்கி உள்ளார். ஆயிரத்தில் ஒருவன், அமரன், படிக்காதவன் என பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இறுதியாக கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் நடித்திருந்தார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது, சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மூடு பனி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த என் இனிய பொன் நிலவே பாடல் இன்று
வரை பிரபலம். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பிரதாப் போத்தன் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதாப் போத்தன் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பட்டியலினத்தவர்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி

Arivazhagan Chinnasamy

சுழல் – வெப் தொடரின் ஒரு பார்வை

Web Editor

குஜராத்தில்தான் போதைப் பொருள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது-அமைச்சர் பொன்முடி

Web Editor