கனவு பலித்தது… #GOODBADUGLY படத்தில் அஜித்துடன் இணைந்தார் நடிகர் பிரசன்னா!

நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தான் நடிப்பது உண்மைதான் என நடிகர் பிரசன்னா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்…

Actor Prasanna , actor Ajithkumar,GOOD BAD UGLY

நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தான் நடிப்பது உண்மைதான் என நடிகர் பிரசன்னா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் 2025-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தற்போது 90 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஜப்பானிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்போது இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பிரசன்னா இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : #Mahavishnu -க்கு ஜாமின்… சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!

அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தான் நடிப்பதாக நடிகர் பிரசன்னா தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

” அஜித்குமார் சாரின் திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது உண்மைதான். அஜித் சார் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய பலநாள் கனவு. ‘மங்காத்தா’ படத்தில் இருந்து ஒவ்வொரு முறை அஜித் சாரின் படங்கள் அறிவிக்கப்படும்போதும், அதில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதுண்டு. இதனால் அஜித் சாரின் ரசிகர்கள் பலமுறை அவரது படத்தில் நான் இருக்கின்றேன் என நினைத்து வாழ்த்தியுள்ளார்கள். இறுதியாக இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளது”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.