தமிழகம் செய்திகள் சினிமா

பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்!

பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.

பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் உள்ள வேப்பிலையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். நடிப்பு ஆசையால் சென்னை வந்த அவர், ’ஆண்பாவம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுக மானார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நெல்லை சிவா, வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் அம்பானி, கண்ணும் கண்ணும், கற்றது களவு, சகுனி, பாபநாசம் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நெல்லை சிவா, டி.வி.தொடர் களிலும் நடித்துள்ளார். கண்ணும் கண்ணும் படத்தில், கிணற்றைக் காணோம் என்று வரும் வடிவேலு டார்ச்சரால், இன்ஸ்பெக்டராக இருக்கும் சிவா, வேலையை விட்டே போவது போன்ற காமெடி காட்சி பிரபலமான ஒன்று.

திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த நெல்லை சிவா, அவர் பேசும் திருநெல்வேலி வழக்குக்காகக் கவனிக்கப்பட்டவர். ஊரடங்கு காரணமாக தற்போது சொந்த ஊரில் இருந்த நெல்லை சிவாவுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்தார்.

அவர் இறுதிச்சடங்கு பணகுடியில் நாளை நடக்கிறது. நெல்லை சிவாவின் மறைவை அடுத்து சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:

Related posts

இயக்குநர் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு!

’மின்சார வாரியம் தனியார்மயமாகாது’- அமைச்சர் தங்கமணி!

Jayapriya

சர்ச்சை பேச்சு: கைதான பாதிரியாருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் அனுமதி

Gayathri Venkatesan