நாமெல்லாம் எப்ப லவ் பண்ணுவோம்னு ஏங்கிய நிலையில் வந்திய தேவன் கதாபாத்திரம் கிடைத்தது – நடிகர் கார்த்தி

நாமெல்லாம் எப்ப லவ் பண்ணுவோம்னு ஏங்கிய நிலையில் வந்திய தேவன் கதாபாத்திரம் கிடைத்தது என பொன்னியின் செல்வன் 2 படத்தின் PS Anthem Launch நிகழ்ச்சி நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக…

நாமெல்லாம் எப்ப லவ் பண்ணுவோம்னு ஏங்கிய நிலையில் வந்திய தேவன் கதாபாத்திரம் கிடைத்தது என பொன்னியின் செல்வன் 2 படத்தின் PS Anthem Launch நிகழ்ச்சி நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு திரைப்படத்தின் PS Anthem Launch நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சுமார் 6000 மாணவர்கள் மத்தியில் PS Anthem Launch செய்யப்பட்டது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் திரிஷா, ஐஸ்வர்யா ராய்,பிரகாஷ்ராஜ், பார்த்திபன்,சரத்குமார் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதிலும் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக் குழு இந்தியா முழுவதும் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இன்று சென்னையில் தொடங்கி கோவை திருச்சி அதனைத் தொடர்ந்து டெல்லி கொச்சின் ஹைதராபாத் பெங்களூரு மும்பை போன்ற பெருநகரங்களில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் படக் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கத்தில் இந்த நிகழ்ச்சி சரியாக இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், திரிஷா, கார்த்தி உள்ளிட்ட படத்தின் நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி தெரிவித்ததாவது..

” என்ஜினியரிங் படிக்க வேண்டும் என ஒரு பையனுக்கு தலையில் எழுதி இருந்தால் ஒன்று ஐஐடி இல்லைனா அண்ணா யுனிவர்சிட்டி. நானும் என்ஜினியர் தான். நான் ஆசை பட்டேனோ இல்லையோ என் பெற்றோர்கள் ஆசைப்பட்டனர் எப்படியாவது அண்ணா யுனிவர்சிட்டி போக வேண்டும் என்று.

ஆனால் கடைசிவரை சீட்டு கிடைக்கவே இல்லை. இங்கு ரன்னிங் போனதுதான் மிச்சம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் போது பலமுறை இங்கு ஓடி உள்ளேன். படிச்சது பாய் ஸ்கூல் பிறகு மெக்கானிக்கல் இன்ஜினியரிங். ப்ரொபசர் கூட லேடி ப்ரொபசர்  லேடிதான்.  நாமெல்லாம் எப்போது லவ் பண்ணுவோம்னு ஏங்கிய நிலையில் வந்திய தேவன் என்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்தது.

இந்த கூட்டத்தை பார்க்கும் போது சிஎஸ்கே ரேஞ்சில் தான் எல்லாரும் உள்ளனர். நிஜ வாழ்க்கையில் நான் ஜாலியான கதாப்பாத்திரம். நான் மகான் அல்ல படத்தில் வரும் கதாப்பாத்திரம் போல தான். நானும் ரவியும் நிறைய பேசுவோம். விக்ரம் சார் கிட்ட போனால் ஜாலியாக பேசிக்கொண்டே இருப்பார். அவருடைய ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெயராம் உலக மகா இம்சை. மணி ரத்னம் கூட டயலாக் கேட்க மாட்டார். ஆனால் இவர் ஆயிரம் முறை கேட்பார்.” என நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.