முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரின் தைவான் பயணம்


சந்தோஷ்

கட்டுரையாளர்

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டது பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் தற்போதைய செயல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இரண்டாம் உலக போருக்கு பின்னர் சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு பிரச்னையின்போது சீனா தைவான் பிரிவு ஏற்பட்டது. தைவான் தம்மை தனி நாடாக பிரகடனம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், சீனாவோ, தைவானை தங்களின் ஒரு அங்கமாகவே பார்த்து வருகிறது. மேலும், தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள் மீது தனது அழுத்தத்தை செலுத்தி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமெரிக்க அதிபராக பைடன் பதவி ஏற்றத்தில் இருந்தே தைவானுக்கு உதவும் நோக்கில் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் கடல் பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை அதிகப்படுத்தியது. மேலும் சுதந்திரம் அடைய தைவான் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சிக்கும் “போர் என்று பொருள்” என சீனா எச்சரித்தது.

இந்த சூழலில் ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கும் சென்றார். நான்சி தைவான் திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சீனா இதை கடுமையாக எதிர்த்தது. நான்சி பெலோசியின் இந்த பயணம் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது போன்றது, இது மிகவும் ஆபத்தானது என சீனா எச்சரிக்கை விடுத்தது.

இவற்றை மீறி நான்சி பெலோசி தைவான் சென்று திரும்பியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்குப் பயணம் மேற்கொண்ட மிக மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி என்பது குறிப்பிடத்தக்கது. தனது பயணம் நீண்ட கால அமெரிக்காவின் கொள்கைக்கு இசைவானது என்றும், எந்த நாட்டின் இறையாண்மையையும் மீறவில்லை என்று நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘தமிழருவி மணியன் கட்சியின் இளைஞரணி தலைவரான நடிகர்’

நான்சி பெலோசியின் தைவான் பயணம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமெரிக்கத் தூதருக்கு சீனா சம்மன் அனுப்பியுள்ளது.மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவானின் பல்வேறு பொருள்களுக்கு சீனா தடை விதித்திருக்கிறது. உலகம் முழுவதும் மின்னணு உபகரணங்களான கைபேசிகள், மடிக்கணினிகள், தைவானில் தயாரிக்கப்பட்ட கணினி சிப்களால் இயக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 8 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட இத்துறையில் பாதிப்பு ஏற்பட்டால் அது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்பது மாற்றுக்கருத்தில்லை.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவளிக்கும் நட்பு நாடுகளுடான முதல் தீவு சங்கிலி என்றழைக்கப்படும் பட்டியலில் தைவான் உள்ளது. தைவான் சீனா ஆதிக்கத்தில் சென்றால் மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு பின்னடைவாக அமையும். தைவான் விவகாரத்தில் தலையிட்டால் ஆயுதப்படைகள் சும்மா நிற்காது என சீனா மிரட்டல் விடுத்த நிலையில் அமெரிக்க சபாநாயகரின் இந்த பயணம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருந்திருந்தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’நிலத்தடி நீர் எடுப்பதற்காக அனுமதி பெற வேண்டும்’ – மத்திய நிலத்தடி நீர் ஆணையம்

Arivazhagan Chinnasamy

மாநில உரிமைகளை கைவிட்ட மாநில கட்சிகள்

Arivazhagan Chinnasamy

தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Web Editor