நடிகர் ஹரிஷ் கல்யாணின் புதிய திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ்…

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண்.

இறுதியாக, ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘பார்க்கிங்’ திரைப்படம் 5 மொழிகளில் ரீமேக் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் :கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அடுத்ததாக, இவர் தற்போது ‘டீசல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் நடித்த டீசல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், பாஸ்ஸன் ஸ்டூடியோஸ் (passion studios) மற்றும் தி ரூட் நிறுவனம் (the route) தயாரிப்பில் ‘அந்தகாரம்’ திரைப்படத்தின் இயக்குநர் விக்னாராஜன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.