கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்ற காவல்! – டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு!

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நிதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லி அரசின்…

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12ம் தேதி வரை நிதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கெஜ்ரிவாலை 3 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து அவரது காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், கெஜ்ரிவாலை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில், கெஜ்ரிவாலை 14 நாட்கள்(ஜூலை 12-ந்தேதி வரை) நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.