சுந்தர்.சி நடித்துள்ள ‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

சுந்தர்.சி நடிப்பில் உருவான ‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்கியுள்ள ‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தில் சுந்தர்.சி…

சுந்தர்.சி நடிப்பில் உருவான ‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்கியுள்ள ‘ஒன் 2 ஒன்’ திரைப்படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்துள்ளனர். இமைக்கா நொடிகள் திரைப்படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்த திரைப்படத்தில் வில்லன் கதராபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

இதையும் படியுங்கள் : நடிகர் வில் ஸ்மித் வெளியிட்ட புதிய ஆல்பம் | பாடலில் கிறிஸ் ராக் சம்பவம் குறித்த வரிகளால் சர்ச்சை!

மகாராஜா திரைப்படத்திலும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் அதிரடியாக இதுவரையிலும் இல்லாத ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.சி நடித்துள்ளார்.

இவர்களுடன் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன், நடிகை நீது சந்த்ரா முக்கிய பாத்திரத்திலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.