வெளியானது நடிகர் தனுஷ் படத்தின் அசத்தல் பர்ஸ்ட் லுக்

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழின் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்துள்ள நடிகர் தனுஷ், இந்திப் படங்களிலும் நடித்து…

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழின் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்துள்ள நடிகர் தனுஷ், இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அங்கு இப்போது ’அட்ரங்கி ரே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இந்தப் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார்.

இதையடுத்து நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஹாலிவுட் படமான, தி கிரே மேன் என்ற படத்திலும் தனுஷ் நடித்துள்ளார். தனது அசுர நடிப்பால் ஹாலிவுட் வரை சென்றுள்ள நடிகர் தனுஷ், இன்று தனது 38 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து அவருடன் நடித்த நடிகர், நடிகைகள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஹீரோக்களின் பிறந்த நாளுக்கு காமன் டிபியை வெளியிடுவது இப்போது வழக்கமாக இருக்கிறது. அதன்படி நடிகர் தனுஷின் பிறந்த நாள் காமன் டிபியை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். இந்த காமன் டிபியையும் #HappyBirthdayDhanush என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

https://twitter.com/theVcreations/status/1420014093373788162

இதற்கிடையே, நடிகர் தனுஷ் இப்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ’தனுஷ் 43’ என்ற தற்காலிக டைட்டிலுடன் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வந்தது. இந்தப் படத்தின் டைட்டிலை தனுஷ் பிறந்த நாளான இன்று வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

https://twitter.com/SathyaJyothi_/status/1420255215861698566

அதன்படி இந்தப் படத்தின் டைட்டில் ’மாறன்’ என்று வெளியிடப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.