18 வருட திருமண வாழ்கையை திடீரென முடித்த தனுஷ் – ஜஸ்வர்யா தம்பதி

மனைவி ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ள நடிகர் தனுஷ், தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், செல்வராகனின் சகோதரருமான நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னனி…

மனைவி ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்வதாக அறிவித்துள்ள நடிகர் தனுஷ், தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், செல்வராகனின் சகோதரருமான நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான இவர், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 18 வருடங்கள் கழித்து மனைவி ஜஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், கடந்த 18 ஆண்டுகள் தம்பதியாகவும், பெற்றோராகவும் ஒன்றாக பயணித்ததாகவும், தற்போது தானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தங்களது தனிப்பட்ட சுதந்திரத்டிதற்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்வதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இந்த மணமுறிவை, ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஐஸ்வர்யாவும் அதே அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவ்விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களது இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், பலர் எதிர்மறை கருத்துக்களை பதிவிட்டு வந்தாலும், சிலர் இது அவர்களின் முடிவு, அதை நாம் மதிப்போம் என ஆறுதல் கூறி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.