நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி, பெங்களூர் ஜெயா நகர் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி, பெங்களூர் ஜெயா நகர் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது உடல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அர்ஜுனின் வீட்டில் ஒரு துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அண்மைச் செய்தி: ‘9 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் கர்நாடக அரசு ஏமாற்றிவிட்டது- தமிழ்நாடு அரசு புகார்’
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி உடல்நலக்குறைவு காரணமாகப் பெங்களூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றதாகவும், தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.








