நடிகரும் #Shivsena தலைவர்களில் ஒருவருமான கோவிந்தா காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு – என்ன நடந்தது?

பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி நிர்வாகியுமான கோவிந்தா காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பாலிவுட் நடிகர் கோவிந்தா தன்னிடம் உள்ள துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது…

Actor and #Shivsena member Govinda shot in leg - what happened?

பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி நிர்வாகியுமான கோவிந்தா காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பாலிவுட் நடிகர் கோவிந்தா தன்னிடம் உள்ள துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவர் மும்பையில் உள்ள கிரிட்டி கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் மளமளவென கொட்டியது. இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடந்துள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அச்சப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கோவிந்தா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிரபலங்களும் அவர் நலம்பெற வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.