நடிகர் அமீர்கானின் மகள் ஈரா கான் – நுபுர் சிகாரே தம்பதியின் நிச்சயதார்த்தம் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அமீர்கானின் மகள் ஈரா கான், நூபுர் சிகாரே என்பரை காதலித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஈரா கான் பகிர்ந்துள்ள வீடியோவில் நூபுர், முழங்காலில் நின்று, மோதிரத்தை ஈரா கானுக்கு அணிவித்து காதலை தெரிவிப்பது போன்றும், அதற்கு ஈரா கான் தனக்கு இதில் சம்மதம் என்று கூறுவது போன்றும் உள்ளது.
இந்த வீடியோ பதிவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நூபுர் சிகாரேவும் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் நிகழ்ச்சியின் பல படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இருவரும் அவ்வப்போது காதல் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.







