97 நாட்களுக்கு பிறகு அதிரடியாக சரியத் தொடங்கிய ஆக்டிவ் கேஸ் எண்ணிக்கை

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 44,111 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது தடுப்பூசி காரணமாகவும், முன்னெச்சரிக்கை தடுப்பு…

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 44,111 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது தடுப்பூசி காரணமாகவும், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மூலமாகவும் பாதிப்பு குறைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 44,111 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 57,477 பேர் குணமடைந்துள்ளனர். 738 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மொத்த பாதிப்பானது 3,05,02,362 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,96,05,779 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 4,95,533 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,01,050 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 97 நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 5 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. தற்போது மொத்த பாதிப்பில் 1.62 சதிவிகிதத்தினர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோரின் விகிதமானது கடந்த 51 நாட்களாக ஒரு நாள் புதிய பாதிப்பை காட்டிலும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குணமடைவோரின் விகிதமானது 97.06ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதமானது 2.35 சதவிகிமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.