அனல் மின்நிலையங்களில் 58 சதவீதமாக இருந்த மின்உற்பத்தி 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மின்னகம் மூலம் பெறப்பட்ட புகார்களில் 98 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறிய அவர், அனல் மின்நிலையங்களில் 58 சதவீதமாக இருந்த மின்உற்பத்தி 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒன்றிய அரசிடமிருந்து வரக்கூடிய நிலக்கரி முழுமையாக வரவில்லை எனக்கூறிய அவர். தற்போதைய நிலக்கரி கையிருப்பு 5 நாட்கள் வரை மட்டுமே உள்ளதால், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வருவதாகவும் தெரிவித்தார் தூத்துக்குடியில் நிலக்கரி காணாமல் போனது குறித்த முழுமையான அறிக்கை கிடைத்த உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.