மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவையில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளதாக முன்னால அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக உறுப்பினர்கள் நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள் திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி, “கோவை மாநகராட்சியில் வரி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவை குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு, குப்பை வரி மற்றும் அபராத வரி போன்ற வரிகளை ரத்து செய்ய வேண்டும். கோவையில் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கி இருக்கின்றது. சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசியவர், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கின்றது. தண்ணீரை சேமிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அரசு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை வேகமாக முடிக்க வேண்டும் எனவும் மழையால் வாழை உட்பட பயிர்கள் பாதிக்கபட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டும், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் யானைகள் தொந்தரவு அதிகமாக இருகின்றது.

தடுப்புவேலி அமைக்க வேண்டும், மண் எடுப்பதாக விவசாய பெருங்குடி மக்களுக்கு அபராதம் வழக்கு போட்டு இருப்பதை ரத்து செய்ய வேண்டும். மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் சிறுவாணி தண்ணீரை கேரள அரசு அடிக்கடி அணையில் இருந்து திறந்து விட்டு விடுகின்றது. மாவட்ட நிர்வாகம் அதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை.

தற்போது மழை பெய்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாகவும் நாங்கள் வைத்த கோரிக்கைகள் மீது அதிகபட்சமாக 10 நாட்களில் நடவடிக்கைகள் எடுக்க
வில்லை எனில் கண்டிப்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும் மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பதில் அளிக்காமல் சிரித்தபடி சென்றுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.