முக்கியச் செய்திகள் இந்தியா

சண்டிகர் டு சென்னை: 2,500 கி.மீ பயணித்து உயிரைக் காப்பாற்றிய இதயம்!

சண்டிகரில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் 2,500 கி.மீ பயணித்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு இளைஞர் ஒருவருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரை சேர்ந்த 45 வயது இளைஞர் ஒருவர் கடந்த 4 ஆம் தேதி விபத்தில் படுகாயமடைந்தார். தலையில் காயம் அடைந்த அவர், சண்டிகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுபற்றி மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவர் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க, அவர் குடும்பத்தினர் சம்மதித்தனர். அவருடைய சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளையும் தானமாக வழங்க முடிவானது.

இதையடுத்தை சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 52 வயதுள்ள ஒருவருக்கு அவர் இதயத்தை பொருத்த முடிவானது. அதன்படி புதன்கிழமை பிற்பகல், அந்த இதயம் பாதுகாப்பாக மொகாலி சர்வதேச விமான நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து 3.25 மணிக்கு விஸ்தாரா விமானத்தின் மூலம் சென்னைக்கு அந்த இதயம் கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து 2, 500 கி.மீ பயணித்த அந்த இதயம், இரவு 8.30 மணிக்கு சென்னை வந்தடைந்தது. விரைவாக எம்.ஜி.எம்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த இதயம், 52 வயதுகாரருக்கு பொருத்தப்பட்டது. இதனால் உயிருக்குப் போராடி கொண்டிருந்த ஒருவர், உயிர் பிழைத்திருக்கிறார்.

இதுபற்றி அந்த மருத்துவ பல்கலைக்கழத்தின் இயக்குநர், பேராசிரியர் சுர்ஜீத் சிங் கூறும்போது, ’இதுபோன்ற உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு நேரம் மிகவும் முக்கியமானது. இதயம் தேவைப்பட்ட நபர் 2500 கி.மீ தூரத்தில் இருந்தாலும் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது. மற்றொருவர் உயிரைக் காப்பாற்ற, உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க ஒப்புக்கொண்ட அந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு நன்றி’ என்று தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவின் கடைசி தொண்டன் வரை திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பார்கள்: ஓபிஎஸ்

Niruban Chakkaaravarthi

கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல: உயர்நீதிமன்றம்

Jeba Arul Robinson

முதல் சர்வதேச கோப்பையை வென்ற மெஸ்ஸி!

Ezhilarasan