நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3,32,89,579ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,127 பேர் குணமடைந்துள்ளனர். 339 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 3,32,89,579 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,24,84,159ஆகவும், உயிரிழப்பு 4,43,213 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது 3,62,207 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 75,22,38,324 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 78,66,950 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/MoHFW_INDIA/status/1437623574135656450
தற்போது பதிவாகியுள்ள 25,404 புதிய பாதிப்பில், 15,058 பேர் கேரளாவை சேர்ந்தவர்களாவார்கள். புதிய உயிரிழப்பில் 99பேர் கேரளாவை சேர்ந்தவர்களாவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.








