‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்கள் மூலம் கடந்த 2007ம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மன்மோகன் சிங் இந்த அமைப்பின் உருவாக்கத்தின்போது பிரதமராக இருந்தார். தற்போது இந்த அமைப்பின் உறுப்பினர்களான நான்கு நாட்டின் பிரதமர்களும் முதன் முறையாக நேரில் சந்திக்கும் மாநாடு அமெரிக்காவில் செப்.24ல் நடைபெறுகிது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் குவாட் அமைப்பின் மாநாடு காணொலி மூலம் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு அந்நாடு அதிபர் ஜோ பைடன் தலைமையேற்கிறார்.
இதில் கடந்த மார்ச் மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும், அதனுடன் பிராந்திய விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும், இந்த நான்கு நாடுகளின் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமல்லாது, சைபர் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், மனிதாபிமான உதவிகள், குவாட் நாடுகளுக்கிடையேயான தொடரப்புகள் மற்றும் கல்வி குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டை தொடர்ந்து செப்.25ல் ஐ.நாவின் 76வது அமர்வின் பொது விவாதத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








