ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, சூப்பர் 4 சுற்றுக்கு சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. நேபாள அணியின் களம் இறங்கிய புர்டெல் 58 ரன்களும், குஷால் 38 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அடுத்த வீரர்கள் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தத நேபாள அணி 230 ரன்களை எடுத்தது.
நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 17 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனையடுத்து 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.







