என் தலையை சீவ 10 கோடி ரூபாய் எதற்கு 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவிக்கொள்வேனே என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
உண்மையான இனப்படுகொலை நடத்துவது பாரதிய ஜனதா கட்சி தான். மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது. ரமணா சினிமா போன்று உயிரிழந்த 88 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்ததாத பாஜக அரசு ஊழல் செய்தது CAG அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தை காப்பாற்ற பாசிச பாஜகவை விரட்ட வேண்டும். எஜமானர் பாஜகவையும் அடிமை அதிமுகவையும் ஒழிக்க வேண்டும். 2024 தேர்தலில் தமிழகத்தின் வெற்றி இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்.
ஒட்டுமொத்த இந்தியாவும் தற்போது என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா ஒழிப்பு போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினேன். அதனால் அமித்ஷா, நட்டா போன்றவர்களும் என்னைப் பற்றி பேசுகிறார்கள்.
வட இந்திய சாமியார் ஒருவர் எனது தலைக்கு 10 கோடி ரூபாய் தருவதாக கூறியிருக்கிறார். சாமியாரிடம் 10 கோடி ரூபாய் ஏது? அவர் டுப்ளிகேட் சாமியாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது? 10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி கொள்கிறேன்.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் தலையை சீவ ஒரு கோடி ரூபாய் தருவதாக ஒருவர் கூறியிருந்த நிலையில், அதற்கு 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் என் தலையை சீவ முடியாது என நகைச்சுவையாக குறியிருந்தார்.