சாதனை மேல் சாதனை…!! – 371 நாட்களுக்கு பின் விண்வெளியில் இருந்து பூமி திரும்பிய நபர்

விண்வெளியில் 371 நாட்கள் தங்கியிருந்த பின், நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ பூமி திரும்பினார். ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஏற்பட்ட கூலண்ட் எனப்படும் குளிர் சாதன லீக்கை சரி செய்வதற்காக கடந்த ஆண்டு சர்வதேச…

விண்வெளியில் 371 நாட்கள் தங்கியிருந்த பின், நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ பூமி திரும்பினார்.

ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஏற்பட்ட கூலண்ட் எனப்படும் குளிர் சாதன லீக்கை சரி செய்வதற்காக கடந்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ விண்வெளிக்கு அனுப்பப்பட்டார். 6 மாதங்கள் மட்டுமே விண்வெளியில் ஆய்வு செய்வதற்காக ரூபியோ அனுப்பப்பட்டார். இயந்திரக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் போனதால், 371 நாட்கள் விண்வெளியிலேயே தங்க வேண்டிய சூழல் உருவானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கஜகஸ்தான் அருகே ரஷ்ய விண்வெளி வீரர்கள் செர்ஜி புரோகோபியேவ் மற்றும் டிமிட்ரி பெட்லின் ஆகியோருடன் சோயஸ் எம்எஸ் 23 கேப்ஸ்யூல் உதவியுடன் ஃபிராங்க் ரூபியோ பூமியில் தரையிறங்கினார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் பேட்டியளித்த அவர், “பூமிக்கு வந்தது சிறப்பாக இருக்கிறது. இத்தனை நாட்கள் விண்வெளியில் இருப்பேன் என்று நினைக்கவில்லை. பூமியின் திடீர் ஈர்ப்பு விசையை உணர்வது வித்தியாசமாக இருக்கிறது. இந்த ஈர்ப்பு விசை புதுவிதமான உணர்வை தருகிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : “சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து….” – யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்தது ‘Badass’!!

371 நாட்கள் விண்வெளியில் இருந்ததன்மூலம், அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த அமெரிக்கர் என்ற சாதனையையும், ஒரு முழு காலண்டர் ஆண்டை பூமிக்கு வெளியே குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் பதிவு செய்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையையும் ஃபிராங்க் ரூபியோ பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்த வீரராக மார்க் வந்தே ஹெய் (355 நாட்கள்) இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.