பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் மீலாடி நபி விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மீலாடி நபி விழா நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த மசூதி அருகே  தற்கொலைப் படையினர் நடத்தியுள்ளனர்.…

பாகிஸ்தானில் மீலாடி நபி விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மீலாடி நபி விழா நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த மசூதி அருகே  தற்கொலைப் படையினர் நடத்தியுள்ளனர். இந்த  தாக்குதலில் சுமார் 52 பேர் கொல்லப்பட்டனர். மேலும்  50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்துங் மாவட்டத்தில் இஸ்லாம் மதத்தின் இறைத் தூதராக போற்றப்படும் முகம்மது நபியின் பிறந்தநாளான ஈத் மிலாடி நபி கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின்போது மதீனா மசூதிக்கு அருகே திடீரென மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னர்  படுகாயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த மனித வெடிகுண்டு சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியை அவசரநிலை பகுதியாக அறிவித்துள்ளனர். தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.