ஹிந்தி படப்பின் போது ஏற்பட்ட விபத்தினால் இயக்குனர் சுதா கொங்கரா காயமடைந்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ம் ஆண்டு வெளியான படம் சூரரைப்போற்று. கொரோனா காலகட்டத்தில் இந்த படம் வெளியானதால் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இந்த படத்திற்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை சுதா கொங்காரா பெற்றார். மேலும் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளியும் பெற்றனர்.
Super painful. Super annoying! On a break for a month 😒 #NotTheKindOfBreakIWanted pic.twitter.com/AHVR4Nfumf
— Sudha Kongara (@Sudha_Kongara) February 5, 2023
இந்நிலையில், இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படப்பின் போது இயக்குனர் சுதா கொங்கராவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிகவும் வலிமிகுந்ததாக உள்ளது. ஒரு மாத காலத்திற்கு இடைவேளை எடுத்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.