பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார் பக்தர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், சேலத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து தங்கள் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய சென்னை திருசூலத்தை சேர்ந்த கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







