ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் ரேவதி  பங்கேற்க ஆகும் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். 
மதுரையைச் சேர்ந்த சர்வதேச தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதற்காக அவர் பயின்ற லேடி டோக் கல்லூரியில் ரேவதி, அவரது பயிற்சியாளர் கண்ணன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. நிகழ்வில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் லேடி டோக் கல்லூரி நிர்வாகம் சார்பில் ரேவதி மற்றும் அவரது பயிற்சியாளர் கண்ணன் ஆகியோருக்கு தலா 1 இலட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை ரேவதிக்கே வழங்கினார் பயிற்சியாளர் கண்ணன்.
தொடர்ந்து உரையாற்றிய வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேச்சு, “தாய், தந்தையை இழந்தாலும் சாதனையை செய்துள்ள ரேவதி இந்தியாவுக்கே முன் மாதிரியாக உருவெடுத்துள்ளார். ரேவதியின் சாதனையில் அவரது பாட்டி ஆரம்மாலுக்கு முக்கிய பங்கு உள்ளது.  கிராமத்தில் பிறந்து நாட்டுக்கே பெருமை தேடித் தந்துள்ளார் ரேவதி” என்று பாராட்டினார்.
ரேவதியின் சாதனைகளை பார்த்து பல ரேவதிகள் உருவாக வேண்டும் என்ற அவர், “ரேவதி மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆகும் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். அவர்  மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வாங்குவார்” என்று கூறினார்.
ஒலிம்பிக் வீராங்கனை ரேவதி பேசும்போது, கல்லூரி நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பால் நாம் முன்னேறி வந்துள்ளேன், பள்ளிப் படிப்புடன் படிப்பை கைவிடும் சூழலில் இருந்தேன்,  பயிற்சியாளர் கண்ணனால் நான் கல்லூரி படிக்க முடிந்தது, அனைவரின் வேண்டுதலால் நான் ஒலிம்பிக் போட்டி வரை சென்று உள்ளேன் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியூஸ் 7 தமிழின் பிரமாண்டமான உணவு திருவிழா இனிதே நிறைவு!

G SaravanaKumar

ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜிஆரின் முதலும் கடைசியுமான திரைப்படம் ‘அன்பே வா’

G SaravanaKumar

ஒரே உயரத்தில் பறந்தன.. நடுவானில் சென்னை- பெங்களூரு விமானங்கள் மோதல் தவிர்ப்பு

Gayathri Venkatesan