எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போலி வாக்காளர்களை தடுக்கும் விதமாக இந்த மசோதா நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பதை தவிர்க்க முடியும் என இந்த மசோதா குறிப்பிடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மட்டுமல்லாது, பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் கணவர்களுக்கு பதிலாக அவர்களது மனைவிகள் வாக்களிக்கலாம் என்றிருந்த சட்டத்தில் புதிதாக மற்றொரு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம், பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் மனைவிகளுக்கு பதிலாக கணவர்கள் வாக்களிக்கவும் மசோா வழிவகை செய்கிறது.
மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த எதிர்ப்பையும் மீறி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனிடையே மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் எம்.பி சசிதரூர், “ஆதார் இருப்பிடத்திற்கு மட்டுமே சான்றாக இருக்க வேண்டுமே தவிர குடியுரிமைக்கு அல்ல. இந்த மசோதா மூலம், குடியுரிமை இல்லாதவர்களையும் வாக்களிக்க அரசு வழிவகை செய்கிறது.” என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று மசோதா சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.